தமிழகம், புதுச்சேரியில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் - மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்!
Jul 27, 2025, 03:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகம், புதுச்சேரியில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Dec 1, 2024, 11:26 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகம், புதுச்சேரியில்  மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை விரைவுபடுத்த வேண்டும்  என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறத்தியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சால் புயல் கரையைக் கடக்கும் போது பெய்த கடுமையான மழையால் தமிழ்நாட்டில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.

தமிழ்நாட்டிலும், புதுவையிலும் மக்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் நிலையில், அவர்களின் பாதிப்புகளைக் களைய மாநில அரசுகள் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் மிக அதிக அளவாக திண்டிவனத்தில் 37.40 செ.மீ மழை பெய்திருக்கிறது. நேமூர் 35.20 செ.மீ, வல்லம் 32 செ.மீ. செம்மேடு 31 செ.மீ, வானூர் 24 செ.மீ மழை பெய்திருக்கிறது. இதனால், திண்டிவனம், மயிலம், மரக்காணம், வானூர் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

திண்டிவனம் நகரத்தில் கிடங்கல் ஏரி உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. வீடூர் அணையிலிருந்து வினாடிக்கு 36 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதால் அப்பகுதியிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது. பயிர்களுக்கும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

மழையால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் கடுமையான பாதிப்புகளுக்கு அரசின் அலட்சியமும், செயலற்ற தன்மையும் தான் காரணம் ஆகும். திண்டிவனம் உள்ளிட்ட விழுப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் வடிகால்கள் தூர்வாரப்படாததும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததும் தான் இந்த நிலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களுக்கு அரசுத் தரப்பில் போதிய உதவிகள் வழங்கப்படாததால், சில இடங்களில் உணவு கூட கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

புதுவை, விழுப்புரம் மாவட்டத்தின் எல்லைப்பகுதியான கோட்டக்குப்பத்தில் வெள்ளம் போல் தண்ணீர் தேங்கியிருப்பதால் பல்லாயிரக்கணக்கான வீடுகளில் வசிக்கும் மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மழை – வெள்ளம் பாதித்தப் பகுதிகளில் மீட்புப் பணிகளை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை உடனடியாக வழங்க வேண்டும். பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களை கணக்கிட்டு உழவர்களுக்கும், பொதுவான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள பொது மக்களுக்கும் உரிய இழப்பீடுகளை வழங்க தமிழக அரசு வழங்க வேண்டும்.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் தான் புயலால் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளது. புதுச்சேரி நகரத்தில் மட்டும் 47 செ.மீ அளவுக்கு மழை பெய்திருப்பதால் ஒட்டுமொத்த நகரமும் வெள்ளக்காடாக மாறியிருக்கிறது.

மாநில அரசின் சார்பில் உணவு வழங்குவதைத் தவிர ஆக்கப்பூர்வமான பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. புதுச்சேரியில் அனைத்துப் பகுதிகளிலும் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தேவைப்பட்டால் தேசிய பேரிடர் மீட்புப் படையின் உதவியைக் கோர வேண்டும். மழை மற்றும் புயல் காற்றால் விழுந்துள்ள தென்னை மரங்களுக்கும், பாதிக்கப்பட்ட பிற பயிர்களுக்கும் உரிய இழப்பீட்டை வழங்கவும் புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Tags: rain alertweather updateramadosslow pressurerain warningmetrological centerfengaltamandu rainheavy rainpuduchery floodchennai floodramadoss statementchennai metrological center
ShareTweetSendShare
Previous Post

கடலூர் மாவட்டத்தில் தொடரும் மழை – சாய்ந்து விழுந்த மின் கம்பங்கள்!

Next Post

ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறப்பு – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies