மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசிடம் திமுக அனுமதி கோரியது - அண்ணாமலை
Nov 7, 2025, 02:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசிடம் திமுக அனுமதி கோரியது – அண்ணாமலை

Web Desk by Web Desk
Dec 1, 2024, 02:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசிடம் திமுக அனுமதி கோரியதாக  தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது :

“கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 18 அன்று, The New Indian Express ஊடகத்தில் வெளிவந்த செய்தியின்படி, மதுரையில் டங்ஸ்டன் உலோகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான சுரங்கம் அமைக்க, தமிழக அரசு, மத்திய அரசின் அனுமதி கோரி இருப்பதாகவும், தமிழக கனிம வளத் துறையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதாகக் கூறப்பட்டிருந்தது.

மத்திய அரசின் சுரங்கத் துறை நேற்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 2024 பிப்ரவரி மாதம், மதுரையில் டங்ஸ்டன் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பகுதியில் சுரங்கம் அமைக்க ஒப்பந்தப் புள்ளி அறிவிப்பதற்கு முன்பாக, தமிழக அரசு கொடுத்த குறிப்புகள் நடைமுறைப்படுத்தப்பட்டன என்றும், ஒப்பந்தப் புள்ளி வெளியிட்ட பிப்ரவரி மாதம் முதல், ஒப்பந்தம் வழங்கப்பட்ட நவம்பர் 7, 2024 வரையிலான பத்து மாதங்கள், தமிழக அரசு இந்த ஒப்பந்தத்தைக் குறித்தோ, சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கவோ மத்திய அரசைத் தொடர்புகொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதும் திமுக அரசு தான். சுரங்க ஒப்பந்தம் வெளியிடக் குறிப்புகள் கொடுத்ததும் திமுக அரசு தான். கடந்த பத்து மாதங்களாக இது குறித்து வெளியில் தெரியாமல் மறைத்து வைத்திருந்த திமுக அரசு, தற்போது எதிர்ப்பு வருவதும், இது குறித்துத் தங்களுக்கு எதுவுமே தெரியாதது போல நாடகமாடுகிறது.

இதே மதுரை அரிட்டாப்பட்டி பகுதியில், தமிழக அரசின் டாமின் நிறுவனம், 2008 முதல் 30 ஆண்டுகளுக்கு, 47.37 ஹெக்டேர் நிலத்தில் கிரானைட் சுரங்கம் அமைக்கக் குத்தகை பெற்றுள்ளதையும், தற்போது டாமின் நிறுவனம் தனது குத்தகை உரிமத்தைத் திருப்பிக் கொடுத்துள்ளதையும், மதுரை அரிட்டாப்பட்டி, மீனாட்சிபுரம் கிராமங்களில், மொத்தமுள்ள 20.16 சதுர கி.மீ. நில அளவில், 1.93 சதுர கி.மீ அளவே பல்லுயிர் பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் திமுக அரசு, மத்திய அரசுக்குத் தெரிவித்துள்ளது.

டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்கும் ஒப்பந்தத்தில் தெரியாமல் கையெழுத்து இட்டுவிட்டேன் என்று, சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அரங்கேற்றிய அதே நாடகத்தை, தற்போது மீண்டும் அரங்கேற்றத் துடிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். திமுகவின் நாடகம், பொதுமக்களிடம் இனியும் எடுபடாது என அண்ணாமலை கூறியுள்ளார்.

Tags: tungsten mineTamil Nadu Mineral Resources DepartmentMaduraiannamalaistalintamilnadu bjp president
ShareTweetSendShare
Previous Post

வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு!

Next Post

ஒரு சமூகம் வாழ வேண்டும் என்றால் பிறப்பு விகிதம் 2.1 % கீழ் செல்லக்கூடாது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு!

Related News

சுதந்திர உணர்வை வலுப்படுத்தியது வந்தே மாதரம் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு நிறைவு விழா : நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி!

ஆந்திராவில் மாணவிகளிடம் கால்களை பிடித்துவிடுமாறு கூறிய தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!

சுதந்திர தாய்நாட்டின் தேசிய உணர்வு, ஒற்றுமை, மொழி, பண்பாடு, கலாச்சாரத்தை வணங்குவோம் – நயினார் நாகேந்திரன்

சபரிமலை பெருவழிப் பாதை வரும் 17-ம் தேதி திறப்பு – வனத்துறை அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் இளம்பெண் காரில் கடத்தல்? – சிசிடிவி காட்சியால் பரபரப்பு!

அஜித்குமார் மரணம் தொடர்பான ஆய்வக முடிவு – 3 வாரத்தில் சிபிஐக்கு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வந்தே மாதரம் பாடல் ஒவ்வொரு இல்லங்களிலும், நமது உள்ளங்களில் ஒலிக்கட்டும் – எல்.முருகன்

“வந்தே மாதரம்” பாடலின் மகத்துவம் ஒவ்வொரு குடிமகனையும் ஒன்றிணைக்கும் சக்தியில் உள்ளது – அண்ணாமலை

வந்தே மாதரம் 150-வது ஆண்டு கொண்டாட்டம் – அனைவரும் பங்கேற்குமாறு ஆர்எஸ்எஸ் அழைப்பு!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது – பாஜக மாநில மகளிரணி தலைவர் கவிதா ஸ்ரீகாந்த்

வாயால் வடைசுட்டு பெண்களைக் கயமைக் கழுகுகளிடம் பலிகொடுக்கும் அறிவாலய அரசு – நயினார் நாகேந்திரன்

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் – இபிஎஸ் நடவடிக்கை!

ஆட்சிக்கு வந்தவுடன் ஆனைமலை நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும் – நயினார் நாகேந்திரன்

டிரம்பின் கருத்தால் சர்ச்சை – ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை நடத்தி வரும் பாக்.,?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies