வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக விநாடிக்கு 2 ஆயிரத்து 150 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள வைகை அணையின் மூலம், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில் அணையிலிருந்து பாசனத்திற்காக 2 ஆயிரத்து 150 கனஅடி வீதம் தண்ணீர் திற்றக்கப்படுகிறது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாமென பொதுப்பணித்துறை அறிவுறுத்தியுள்ளது.