கள்ளக்குறிச்சியில் பெய்து வரும் கனமழை காரணமாக மணிமுக்தா அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் உள்ள மணிமுக்தா அணையில் இருந்து ஆண்டுதோறும் அக்டோபர் முதல் வாரத்தில் விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் அக்டோபர் 1-ஆம் தேதி அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக, சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து விநாடிக்கு 16 ஆயிரத்து 100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து கல்வராயம் மலையில் இருந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.