சேலம், தருமபுரியில் வெளுத்து வாங்கிய மழை - குடியிருப்புகளுக்குள் புகுந்த வெள்ளம்!
Aug 18, 2025, 12:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சேலம், தருமபுரியில் வெளுத்து வாங்கிய மழை – குடியிருப்புகளுக்குள் புகுந்த வெள்ளம்!

Web Desk by Web Desk
Dec 2, 2024, 03:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தருமபுரி மாவட்டத்தில் இடைவிடாது பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்து மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

ஃபெஞ்சல் புயல் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், நகராட்சிக்கு உட்பட்ட அன்னை சத்யா நகர், ஆவின் நகர், நந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

இதனால் அப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் அங்கு வசிக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து சாலைகளிலும் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளதால், அத்தியாவசியப் பொருட்களை வாங்கக் கூட வெளியே செல்ல முடியாமல் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

அப்பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் சேலத்தில் 2 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருமணிமுத்தாரில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில், சின்னேரிவாயக்காடு பகுதியில் இருந்து திருமணிமுத்தாரில் கலக்கும் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது.

இதனால் சினிமா நகர், பள்ளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீருடன் கழிவுநீரும் புகுந்தது. இதனால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் அவதியடைந்த மக்கள், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags: low pressurerain warningmetrological centerfengaltamandu raindharmapuri floodheavy rainchennai metrological centerrain alertweather update
ShareTweetSendShare
Previous Post

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Next Post

வரும் 9,10 ஆம் தேதிகளில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

Related News

எண்ணூர் முகத்துவாரத்தில் எண்ணெய்க் கழிவுகள் கலந்து வருவதால் வாழ்வாதாரம் பாதிப்பு : மீனவர்கள் வேதனை!

பெரும்பாக்கம் : குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு – பெண்கள் மாஸ்க் அணிந்து சாலை மறியல் போராட்டம்!

முதல் முறையாக நடைபெற்ற மாநில அளவிலான படகுப்போட்டி!

தெலங்கானா : தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 5 பேர் உயிரிழப்பு!

விநாயகர் சதுர்த்தி விழா – திருக்கோவிலூரில் இந்து முன்னணி ஆலோசனை!

திருப்பத்தூர் : கனமழையால் இடிந்து விழுந்த சலவை தொழிலாளியின் வீடு!

Load More

அண்மைச் செய்திகள்

பேரணாம்பட்டு அருகே விவசாய நிலத்தில் சுற்றித்திரிந்த காட்டு யானை – பொதுமக்கள் அச்சம்!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

ஆஸ்கர் விருதின் மீது ஆர்வம் இல்லாத ஹாலிவுட் நடிகர்!

திருப்பத்தூர் : புதருக்குள் கிடந்த ஆதார் அட்டைகள், வங்கி ஆவணங்கள்!

குறிவைத்து தாக்கிய உக்ரைன் வீரருக்கு குவியும் பாராட்டுக்கள்!

நாமக்கல் : பெண்ணின் வறுமையை பயன்படுத்தி கல்லீரல் திருட்டு!

டிரம்பின் வரிகள் அமெரிக்காவை தனிமைப்படுத்தும் : பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கடும் எச்சரிக்கை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு அனைத்து தமிழக எம்பிக்களும் ஆதரவு அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

நாட்றம்பள்ளி : விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்!

விழுப்புரம் : இளைஞர் கொலை – முன்னாள் காதலி, அவரது பெற்றோர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies