முன்னறிவிப்பின்றி சாத்தனூர் அணை திறக்கப்பட்டதால் 4 மாவட்டங்களில் பேரழிவு : மருத்துவர் ராமதாஸ் குற்றச்சாட்டு!
Oct 9, 2025, 12:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முன்னறிவிப்பின்றி சாத்தனூர் அணை திறக்கப்பட்டதால் 4 மாவட்டங்களில் பேரழிவு : மருத்துவர் ராமதாஸ் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Dec 3, 2024, 12:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முன்னறிவிப்பின்றி சாத்தனூர் அணை திறக்கப்பட்டதால் 4 மாவட்டங்களில் பேரழிவு  ஏற்ட்டதாக மருத்துவர் ராமதாஸ் குற்றச்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், 4 மாவட்டங்களில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த நெல் உள்ளிட்ட பயிக்களும், ஆடுகள், மாடுகள், கோழிகள் போன்ற கால்நடைகளும் வெள்ளத்தில் சிக்கி முற்றிலுமாக அழிந்து விட்டன.

இந்த இழப்புகளில் இருந்து மீள்வதற்கு அப்பகுதி மக்களுக்கு பல ஆண்டுகள் ஆகக்கூடும். அதிர்ச்சியிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பவே சில நாட்களாகும். கர்நாடகத்தில் உருவாகும் தென்பெண்ணை ஆறு பெங்களூர், ஒசூர், கிருஷ்ணகிரி வழியாக சாத்தனூர் வருகிறது.

தொடங்கும் இடத்திலிருந்து சாத்தனூர் அணைக்கு வரும் வழி வரை பரை அனைத்து இடங்களிலும் கடுமையான மழை பெய்வதால் காட்டாறுகள் உருவாகி அந்த நீரும், பாம்பாறு உள்ளிட்ட பல துணை நதிகளும் தென்பெண்னைா ஆற்றில் தான் இணைகின்றன. அதனால், சாத்தனூர் அணைக்கு வரும் தண்ணிரின் அளவு ஞாயிற்றுக்கிழமை பகலிலேயே அதிகரிக்கத் தொடங்கி விட்டது. அடுத்த சில மணி நேரங்களில் அணை நிரம்பி விடும் என்பது பொறியாளர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும்.

தென்பெண்ணை ஆறு வினாடிக்கு ஒரு லட்சம் என அடி நீரை மட்டும் தான் தாங்கும் அதற்கு மேல் நீர் திறக்கப்பட்டால் போழிவு ஏற்படும் என்பதும் அணையின் பொறியாளர்களுக்கு தெரிந்தது தான். அதன்படி ஞாயிற்றுக்கிழமை பிற்பகலிலிருந்தே சாத்தனூர் அணையிலிருந்து கணிசமான அளவில் தண்ணி வெளியேற்றப்பட்டிருந்தால், இவ்வளவு பெரிய அழிவு ஏற்பட்டிருக்காது. ஆனால், எந்த எஜமானரின் ஆணைக்காக அவர்கள் காத்திருந்தார்கள்? என்பது தான் தெரியவில்லை.

2015-ஆம் ஆண்டில் ஒரு நள்ளியில் செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டதையே மீண்டும் மீண்டும் கூறி தனது தோல்விகளை நியாயப்படுத்தி வந்த திமுக அரசு, இப்போது நள்ளிரவில் சாத்தனூர் அணையை திறந்து விட்டதன் மூலம் அதை விட பல படங்கு பேரழிவுக்கு காரணமாகியிருக்கிறது.

ஆட்சி செய்யவே தகுதி இல்லாத கட்சி திமுக என்பது இதன் மூலம்  நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்காக கொடுக்கப்பட்ட விலை அதிகம். சாத்தனூர் அணையிலிருந்து வினாடிக்கு சுமார் 2.50 லட்சம் கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படும் நிலையில், நிலைமை ஒவ்வொரு மணி நேரமும் மோசமடைந்து வருகிறது, நிலைமையை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும்.

சாத்தனூர் அணையை நள்ளிரவில் திறந்து போழிவை ஏற்படுத்தியதற்கான தமிழ்நாட்டு மக்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். சாந்தனூர் அணை முன்னறிவிப்பின்றி திறந்து விடப்பட்டதற்கு காரணம் என்ன? இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யார்? என்பதைக் கண்டறிய உயர்நிலை விசாரணைக்கு தமிழக அரசு உடனடியாக ஆணையிட வேண்டும்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் அனைத்துக் குடும்பங்களுக்கும் தலா 5.25,000 இழப்பீடு வழங்க வேண்டும். சேதமடைந்த பயிர்களுக்கும், உயிரிழந்த கால்நடைகளுக்கும் உரிய இழப்பீடு வேண்டும். மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தமிழக அரசு கோரும் நிவாரண நிதியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Tags: fengaltamandu rainsathanur damheavy rainchennai floodchennai metrological centerrain alertweather updatelow pressurerain warningmetrological center
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

தெலங்கானாவில் சாலையோர வியாபாரிகள் மீது மோதிய லாரி – 4 பேர் பலி!

Related News

ராமநாதபுரம் : வரலாற்றுச் சிறப்புமிக்க திருமலை சேதுபதி கல்வெட்டு கண்டெடுப்பு!

15 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை – டென்மார்க்

சென்னை : மின்னல் வேகத்தில் தறிகெட்டு ஓடிய கார் – வடமாநில தொழிலாளி பலி!

வேலூர் : திமுகவினருக்கு மட்டுமே தொகுப்பு வீடுகள் ஒதுக்கீடு – கிராம மக்கள் குற்றச்சாட்டு!

விமானத்தில் பயணித்த முதியவர் உயிரிழப்பு!

மூதாட்டியின் உடல் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானம்!

Load More

அண்மைச் செய்திகள்

என் வாழ்வில் தனஸ்ரீயின் அத்தியாயம் முடிந்துவிட்டது – சாஹல்

டி20-ல் தனக்கான இடத்தை சுப்மன் கில் சம்பாதிக்க வேண்டும் – ராபின் உத்தப்பா

ரூ.8,576 கோடி இழப்பீடு வழங்க ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ஆணை!

திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி. விவரம் இல்லாமல் பொருட்கள் விற்பனை செய்தால் ரூ.1 லட்சம் அபராதம் – புதுச்சேரி அரசு எச்சரிக்கை!

நீலகிரி : ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் எருமைப்பால் மதிப்பு கூட்டு மையம் திறப்பு!

கிரிப்டோ கரன்சிகள் திருட்டில் வடகொரிய ஹேக்கர்கள் சாதனை!

ஆஸ்திரேலியா சென்றுள்ள ராஜ்நாத் சிங்கிற்கு, பழங்குடியின மக்கள் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு!

ட்ரம்புக்கு பதிலடி கொடுத்த கிரெட்டா தன்பெர்க்!

ஆஸ்திரேலியாவில் UFC வீரர் சுமன் மொக்தாரியன் சுட்டுக்கொலை!

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து அருந்திய குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் – மருந்து நிறுவன உரிமையாளர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies