தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோர வியாபாரிகள் மீது மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சேவல்லா மண்டலம் அள்ளூர் அருகே சாலையோர வியாபாரிகள் காய்கறிகளை விற்பனை செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, அதி வேகத்தில் சென்றது. இதனைக் கண்ட வியாபாரிகள் அச்சத்தில் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அப்போது அவர்கள் மீது லாரி மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயம் அடைந்தனர்.
லாரி கேபினில் சிக்கிக் கொண்ட ஓட்டுநரையும், விபத்தில் காயமடைந்தவர்களையும் போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தெலங்கானா மாநிலத்தில் உள்ள பெரும்பாலான 4 சக்கர வாகனங்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் சாலையில் பயணம் செய்வதாகவும், இதற்கு போக்குவரத்து துறை அனுமதி எப்படி அளித்தது என்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.,