திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான தங்கும் விடுதியில் சானிடைசர் பேரல் வெடித்ததில் இருவர் காயமடைந்தனர்.
முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக நிர்வாகம் சார்பில் தங்கும் விடுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தண்டபாணி நிலையத்தில் உள்ள தங்கும் விடுதியில் இருந்த சானிடைசர் பேரல் திடீரென வெடித்து தீப்பிடித்தது.
இதனால் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பக்தரின் கார் தீபற்றி எரிந்து சேதமடைந்தது. மேலும், இந்த விபத்தில் துப்புரவு தொழிலாளர்கள் இருவர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் வெகு நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.