மதுரையில் பள்ளி மாணவர்கள் ரத்தம் சொட்ட சொட்ட தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை தெப்பக்குளம் பேருந்து நிலையத்தில் மாணவர்கள் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது, அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் இரு பிரிவாக பிரிந்து சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.
மாணவர் ஒருவருக்கு ரத்தம் சொட்டிய நிலையிலும் மோதலை கைவிடவில்லை. தாக்குதலின்போது, அவர்கள் கற்களை எடுத்து வீசிக்கொண்டதால் அவ்வழியாக சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சமடைந்தனர்.