தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கோயில் பிரச்சனை தொடர்பாக அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்பட்டதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்செந்தூர் அருகே தேரிக்குடியிருப்பு பகுதியில் கற்குவேல் அய்யனார் கோயில் உள்ள நிலையில், கோயிலில் பூஜை செய்வது தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் கோயில் நிர்வாகம் நியமித்த குருக்கள் மூலம் பூஜைகள் செய்யப்படுகின்றன.
இதற்கு ஒரு தரப்பு மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையடுத்து 100க்கும் மேற்பட்ட அங்கு வருகை தந்த நிலையில், 4 மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் அங்கு வரவில்லை என தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.