மழை வெள்ள பாதிப்புகளை தடுப்பதில் திமுக அரசு படுதோல்வி அடைந்து விட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
திண்டிவனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு விழிப்புடன் செயல்பட்டிருந்தால் பேரிழிப்பை தவிர்த்திருக்கலாம் என தெரித்தார்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் அனைத்து பணிகளும் சிறப்பாக நடப்பதாக மாயத்தோற்றத்தை அரசு ஏற்படுத்துவதாகவும், மாயைகளால் மக்களின் துயரங்களை அடைத்து விட முடியாது என்றும் கூறினார்.
இந்தியாவிலையே தமிழக உழவர்களின் நிலைதான் மோசமாக உள்ளதாகவும் ராமதாஸ் குறிப்பிட்டார்.