வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்தியக் குழு இன்று தமிழகம் வருகிறது.
ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தின் வடமாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், பாதிப்புகளை பார்வையிட்டு மத்திய அரசு உரிய நிதி ஒதுக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியது.
இந்நிலையில், புயல் பாதிப்புகளை பார்வையிட உள்துறை இணை செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையிலான மத்திய குழுவினர் இன்று மாலை சென்னை வருகின்றனர்.
தொடர்ந்து நாளை முதல் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மத்திய குழுவினர் ஆய்வு நடத்த உள்ளனர். ஊரக வளர்ச்சி, நீர்வளம், சாலை போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 7 அதிகாரிகள் இந்த மத்திய குழுவில் இடம்பெற்றுள்ளனர்.