நெருக்கடியான நேரத்தில் புயல் நிவாரண நிதியை விடுவித்து, தமிழக மக்களுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருப்பதை வெளிப்படுத்தி இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் பதிவில், பிரதமர் மோடி அரசு, ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவான நிவாரணம் வழங்குவதற்காக, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 944. 80 கோடியை விடுவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த முக்கியமான உதவி என்றும், நமது மக்களின் துன்பத்தைத் தணிக்கவும், துயரத்தில் இருந்து மீட்கவும் உதவும் எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.