மழை வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு, சேவா பாரதி தமிழ்நாடு மற்றும் மாதவ தீபம் அறக்கட்டளை சார்பில் நிவாரணப் பொருட்கள் சேலத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன.
திருவண்ணாமலை, தண்டராம்பட்டு,செங்கம் ஒன்றியம் உள்ளிட்ட 78 கிராமங்களில் உள்ள 9 ஆயிரத்து 119 பேருக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதில், 547 உணவுப் பொட்டலங்கள், ஆயிரத்து 322 அரை லிட்டர் பால் பாக்கெட், 325 குடும்பங்களுக்கு தலா ஆயிரத்து 750 ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
மேலும், 225 போர்வைகள், 8 கொசுவலைகள், 50 பாய்கள், ஆயிரத்து 500 பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் குழந்தைகள், பெண்களுக்கான துணி வகைகள் அனுப்பி வைக்கப்பட்டன.
ஏழை எளிய மக்களிடம் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி, ஆபத்தான காலகட்டத்தில் உதவி செய்து வரும் சேவா பாரதி தமிழ்நாடு மற்றும் மாதவ தீபம் அறக்கட்டளைக்கு பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.