லாட்டரி அரசியலையும், கார்ப்பரேட் அரசியலையும் தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் - ஏ.என்.எஸ்.பிரசாத்
Jan 14, 2026, 09:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லாட்டரி அரசியலையும், கார்ப்பரேட் அரசியலையும் தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் – ஏ.என்.எஸ்.பிரசாத்

Murugesan M by Murugesan M
Dec 7, 2024, 03:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லாட்டரி அரசியலையும், கார்ப்பரேட் அரசியலையும் தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : நேற்று விகடன் பதிப்பகம் மற்றும் வாய்ஸ் ஆப் காமன் நிறுவனங்கள் இணைந்து நடத்திய எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் லாட்டரி கம்பெனி மன்னன் ஆதவ் அர்ஜூனா குறித்து வெளியான காணொளியில், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்கு முக்கியமான காரணமாக இருந்த ஐ பாக் நிறுவனத்தையும் அதன் நிறுவனர் பிரசாந்த் கிஷோருடன் இணைத்து
லாட்டரி மன்னன் ஆதவ் அர்ஜுனா செயல்பட்டார்.

மேலும் திமுகவின் வெற்றிக்கும், தமிழகத்தில் தற்போதைய மன்னர் ஆட்சி முறைக்கும் மக்கள் விரோத ஊழல் திமுக அரசு அமைய காரணமாக துடிப்புடன் செயலாற்றிய முக்கியமான கருவி ஆதவ் அர்ச்சனா எனவும் மறைமுகமாக கூறி புகழாரம் சூட்டியிருந்தனர்.

மேலும்  நடிகர் விஜயின் வெற்றி கழகத்தின் ஒட்டுமொத்த இமேஜும் மைனஸ் ஆவதை பற்றி கவலைப்படாமல், ஆதவ் அர்ஜுனா தனது பேச்சில் இனி தமிழகத்தில் திமுகவின் ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும். 2026 இல் மீண்டும் திமுகவின் மன்னராட்சி அமையக்கூடாது என்று விஜய் என்கிற மிகச்சிறந்த நடிகரை தன் முன்னே வைத்துக் கொண்டு, தானும் தன்னுடைய பங்கிற்கு மிக சிறப்பாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தினார்.

திமுகவை ஆட்சியில் கொண்டு வந்தவன் நான் என்று தன்னை அந்த விழாவில் அறிமுகப்படுத்த வைத்த ஆதவ் அர்ஜுனா, தான் இதற்கு முன்பு 2021 தேர்தலில் பணக்கார வியாபார செயல்பட்டு மன்னராட்சி முறை வெற்றிபெற, வேலை பார்த்ததை மறைத்து, திமுக கட்சியையும், ஆட்சியையும் எதிர்த்துப் பேசுவது போல் பாசாங்கு செய்து, தன்னுடைய பங்காளி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினையும்கடுமையாக கண்டனம் செய்வது போல் நடித்து, நாடக நடிகர்கள் மற்றும் சினிமா நடிகர்களையும் மிஞ்சும் விதமாக செயல்பட்டது அருவருப்பாக இருந்தது.

2021 இல் திமுக தலைவர் ஸ்டாலின் வெற்றிபெற பணியாற்றி விட்டு, 2026 இல் உதயநிதி முதலமைச்சர் ஆகக்கூடாது என்று பொய் பேசுவதில் பெரும் குழப்பமும் தமிழக அரசியலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கின்ற நல்ல இயக்கங்களை சிதைக்க வேண்டும் என்ற சதியும் உள்ளது என்பதை அரசியல் கட்சிகளும், தமிழக மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆதவ் அர்ஜுனா அவர்களே, பாஜக இரண்டு பர்ஸன்ட் (2%)கட்சி அல்ல. 12 கோடி மக்களின் இதயங்களை இணைத்து உலகின் மிகப்பெரிய கட்சியாக செயல்பட்டு இந்தியாவை ஆளுகின்ற கட்சி.

மேலும் இந்திய தாய் திருநாட்டை காக்கும் சக்தியாக கோடிக்கணக்கான தொண்டர்களின் தேசப் பணிகளை, தெய்வீகப் பணிகளை ஒருங்கிணைத்து செயல்பட்டு வரும் பாஜகவை இனியும் விமர்சித்தால் கடந்த 12 ஆண்டுகளாக அரசியல் சதுரங்கத்தில் நீங்கள் செய்த சட்டவிரோத நடவடிக்கைகளை, பணப்பரிமாற்றங்களை தமிழக மக்களின் முன்னே வெளிச்சத்திற்கு கொண்டு வந்து அம்பலப்படுத்த வேண்டி வரும்.

திமுக உங்களுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை என்பதால் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்து பாராளுமன்ற உறுப்பினராக போட்டியிட வாய்ப்பு பெற முயற்சி செய்து அது கிடைக்கவில்லை என்பதால், பல லட்சம் கோடி லாட்டரி பணத்தை
காப்பாற்ற ஏதாவது ஒரு கட்சியில் இணைந்து அதிகாரத்தை பெறுவதற்காக நீங்கள்
நடத்திய அரசியல் நாடகம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மன்னர் ஆட்சி முறை இருக்கக் கூடாது.வாரிசு அரசியல் கூடாது என்று களம் கண்டு வெற்றிபெற்ற இயக்கம் பாஜக.

தமிழகத்திலும் திமுகவின் மன்னராட்சி முறையை ஒழித்து, ஊழலுக்கும், வாரிசு அரசியலுக்கும் முடிவு கட்டும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் மக்கள் விரோத விரோத ஆட்சி அப்புறப்படுத்துவது தான் நம் அனைவரின் முதல் பணி என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை “என் மனம் என் மக்கள் யாத்திரை” மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்கு ஆதரவாக கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய ஆதரவை 18.5 சதவீதம் வாக்குகள் மூலம் தமிழக பாஜக கூட்டணிக்கு அளித்திருக்கிறார்கள்.

வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆக்டோபஸ் போன்று ஒரு கொடிய அரக்க சக்தியாக தமிழகத்தையும் தமிழக மக்களையும் சுரண்டிக் கொண்டிருக்கும் திமுகவை, தமிழக பாஜக அமைக்கின்ற கூட்டணி உருவாக வேண்டும். தமிழகத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பொற்கால ஆட்சி அமைய வேண்டும் என்று தமிழக மக்கள் மக்கள் இறைவனிடம் தினமும் பிரார்த்தனை செய்து கொண்டு வருகிறார்கள். ஆவலோடு வாக்களிக்க காத்திருக்கிறார்கள்.

தமிழர்களின் உள்ளங்களிலும் தமிழ்நாட்டின் இல்லங்களிலும் நல்லாட்சியை வழங்க கூடிய நம்பிக்கை நட்சத்திரமாக தாமரை சின்னமும், தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வழங்கிய லட்சக்கணக்கான கோடி மக்கள் நல திட்டங்களும் வீற்றிருக்கின்றன.

தமிழகத்தில் மக்கள் விரோத திமுக அரசை, தீய சக்தி திமுக கூட்டணியை வீழ்த்துகின்ற பணியை தமிழக பாஜக உருவாக்கியுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் தளபதியாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாரத பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலில் செவ்வனே தன் கடமையை செய்து முடிப்பார். 2026 இல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும் என ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.

Tags: ans PrasadAadhav ArjunaTamil Nadu BJP state spokespersonTamil NadubjpDMKVijay
ShareTweetSendShare
Previous Post

இலவச வேட்டி சேலை உற்பத்தி கூலியை உடனடியாக வழங்க வேண்டும் – விசைத்தறி சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்!

Next Post

மகா விகாஷ் அகாடி கூட்டணியில் இருந்து விலகுவதாக சமாஜ்வாதி கட்சி அறிவிப்பு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies