செங்கல்பட்டு மாவட்டம் கருநிலம் கிராமத்தில் மின்மாற்றி பழுதானதால் 150 ஏக்கர் விளை நிலங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளன.‘
கருநிலம் கிராமத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இங்குள்ள விளைநிலங்களில் 50க்கும் மேற்பட்ட மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், ஃபெஞ்சல் புயலால் கடந்த 10 நாட்களுக்கு முன் மின்மாற்றி பழுதடைந்துள்ளது.
இதனால் கவலை அடைந்துள்ள விவசாயிகள், பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். மின்மாற்றி பழுதை சரிசெய்ய அதிகாரிகள் பணம் கேட்பதாக குற்றம்சாட்டும் விவசாயிகள், தமிழக அரசு தலையிட்டு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.