தமிழக சுகாதார துறையை சீரமைக்க வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்!
May 6, 2026, 06:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக சுகாதார துறையை சீரமைக்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Dec 11, 2024, 01:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செங்கல்பட்டு அருகே செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்த செய்தி அதிர்ச்சியளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : “செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் பிரசவம் பார்த்ததால், குழந்தை இறந்துவிட்டதாக வந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது.

குழந்தையின் பெற்றோர்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. சமீபகாலமாக, தமிழக சுகாதாரத் துறையில், இது போன்ற வருந்தத்தக்க சம்பவங்கள் அதிகமாகியுள்ளன.

சென்னை போன்ற சில பகுதிகளில் மட்டும் மருத்துவக் கட்டமைப்பு மற்றும் மக்கள் தொகைக்கேற்ப மருத்துவர்கள் எண்ணிக்கை விகிதம், உலக சுகாதார மையத்தின் பரிந்துரையின்படி இருக்கிறதே தவிர, தமிழகம் முழுவதும் பரவலாக இல்லை.

அதிக மக்கள்தொகை இருக்கும் நகரங்களில் கூட, போதுமான எண்ணிக்கையில் அரசு மருத்துவர்கள் இல்லை. சென்னையை மட்டும் வைத்து, மருத்துவக் கட்டமைப்பில் முதலிடத்தில் இருக்கிறோம் என்று பெருமை பேசுவதோடு, தங்கள் வேலை முடிந்து விட்டது என்று நடந்து கொள்கிறது திமுக அரசு.

தமிழகம் முழுவதும், அனைத்து மாவட்டங்களிலும், அனைத்து மக்களுக்கும் போதுமான கட்டமைப்பு இருக்கும்படி, மருத்துவ வசதிகளையும், மருத்துவர் எண்ணிக்கைகளையும் பரவலாக்க வேண்டும் என்றும், தொடர்ந்து பொதுமக்களைப் பாதிப்புக்குள்ளாக்கும் தமிழக சுகாதார துறையை சீரமைக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: annamalaiTamil Nadu BJP State PresidentChengalpattu delivery issueChathurangapattinam Primary Health Center
ShareTweetSendShare
Previous Post

நாகை மாவட்டத்தில் அதிகாலை முதல் மழை – மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

Next Post

வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் இரு சக்கர வாகனங்கள் மீது நடவடிக்கை – போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவு!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies