சென்னை அசோக் நகரில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
வங்கக்கடலை ஒட்டி நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் நேற்றிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை அசோக் நகரில் ஒரு மணி நேரமாக பெய்த கன மழையால், முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர். மேலும், பால் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்க, பொதுமக்கள் மழையில் நனைந்தபடியே சென்றனர்.
இப்பகுதி மழை நீரால் அடிக்கடி பாதிக்கப்படுவதாகவும், அதிகாரிகள் முறையாக நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் பகுதி மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.