செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை நெருங்கி வருவதால் உபரிநீர் திறப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கனமழை காரணமாக வேகமாக உயர்ந்து வருகிறது. நீர்மட்டம் 22 அடியை நெருங்கிவரும் நிலையில் காஞ்சிபுரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். அடையாறு ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்பு உபரிநீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.