சென்னை அண்ணா மேம்பாலத்திற்கு அருகே இரு புற சாலைகளிலும் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.
இதற்கிடையே கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாயினர். குறிப்பாக அண்ணா மேம்பாலத்திற்கு அருகேயுள்ள இரு புற சாலைகளிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அவதியடைந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாயினர்.