பிச்சாட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், ஆரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதால், அணையில் இருந்து வினாடிக்கு 5,600 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
பல்வேறு ஓடைகளில் இருந்து வெளியேறும் நீருடன் சேர்த்து ஆரணி ஆற்றிற்கு 8,000 கனஅடி நீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, தமிழக எல்லையில் ஊத்துக்கோட்டை, சிற்றம்பாக்கம் பனப்பாக்கம், பெரியபாளையம், ஆரணி, பழவேற்காடு வரையிலான கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.