தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பெய்துவரும் கனமழையின் காரணமாக சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
கோவில்பட்டி நகரில் பல மணி நேரமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இனாம் மணியாச்சி, அத்தைக்கொண்டான் கண்மாய்கள் நிரம்பி தண்ணீர் வெளியேறுவதால், இளையரசனேந்தல் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.
மேலும், அரசு போக்குவரத்து பணிமனை முழுவதும் தண்ணீர் சூழ்ந்ததால், பேருந்துகள் வெளியே வர முடியாத சூழல் நிலவுகிறது. இதேபோல, பெட்ரோல் பங்க், தனியார் நிறுவனங்களிலும் மழைநீர் புகுந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.