தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டி அருகே உள்ள காமாட்சிபுரம் பகுதியில் உள்ள பட்டமாவடி ஏரி வாய்க்கால் நிரம்பி வழிந்து தண்ணீர் ஊருக்குள் புகுந்தது.
இதனால், அந்த பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. மேலும், வீடுகளுக்குள் இருந்த உணவு பொருட்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன.
வாய்க்கால் முறையாக தூர்வாராததே ஏரி நீர் வெளியேறி ஊருக்குள் வரக்காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். மேலும், தேங்கிய தண்ணீரை உடனே வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.