ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 2 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில், முதுகுளத்தூர், சாயல்குடி மற்றும் கடலாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், கஞ்சம்பட்டி ஓடையில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால், ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
மக்கள் அத்தியாவசிய பணிகளுக்காககூட வெளியே செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மிளகாய், உளுந்து மற்றும் மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.
இதனால், சேதம் அடைந்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.