தேனியில் பெய்துவரும் கனமழையின் காரணமாக கும்பக்கரை, சுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தேனியின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த வகையில், சுருளி, கும்பக்கரை அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனால் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழையின் காரணமாக நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வருவதால், பொதுமக்கள் நீர்நிலைகளில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.