ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை அமல்படுத்தி, இந்தியாவின் அனைத்து மூலைகளிலும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் அரசியல் சாசனம் மீதான விவாதத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களுக்கு மிகப்பெரிய தொலைநோக்கு சிந்தனை இருந்ததாகவும், அதனை அடிப்படையாக கொண்டு நாம் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் கூறினார்.
75 ஆண்டு கால பயணம் என்பது சாதாரண ஒரு நிகழ்வு அல்ல அரிதான நிகழ்வு எனவும் அவர் குறிப்பிட்டார். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் ஒரு பகுதியில் மின்சாரம் இருந்தும் முறையாக வழங்கப்படாததால் அங்கும் இருள் சூழ்ந்திருந்தாக அவர் குற்றஞ்சாட்டினார்.
குறிப்பாக காங்கிரஸ் ஆட்சியில் திணிக்கப்பட்ட எமர்ஜென்சியால், நாடு சிறைச்சாலையாக மாறியதுடன் குடிமக்களின் உரிமைகள் சூறையாடப்பட்டதாகவும் பிரதமர் மோடி விமர்சித்தார்.