நாமக்கல் அருகே பெரியமணலி பகுதியில் வெளுத்து வாங்கிய கனமழையால், 10க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது.
நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், பெரிய மணலி, குருசாமிபாளையம், புதுப்பட்டி, நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால், ஜேடர்பாளையம் பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. மேலும் தெருக்களில் முழக்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியதால், அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.
இதுகுறித்து தகவல் கொடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், பொதுமக்களே சாலையை துண்டித்து வெள்ள நீரை வெளியேற்றி வருகின்றனர். இதனால், பெரிய மணலியில் இருந்து பரமத்தி வேலூருக்கு செல்லும் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.