மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ள இடத்தில் காவல் ஆணையர் நேரில் ஆய்வு செய்தார்.
அவனியாபுரத்தில் ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகையன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. போட்டி நடைபெற இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில், மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காளை பரிசோதனை மையம், மாடுபிடி வீரர்கள் பரிசோதனை மையம், சிகிச்சை அறை உள்ளிட்ட இடங்களையும் அவர் பார்வையிட்டார்.