வட மாநிலங்களில் வாட்டி வதைக்கும் குளிர் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு - சிறப்பு தொகுப்பு!
Jul 26, 2025, 12:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வட மாநிலங்களில் வாட்டி வதைக்கும் குளிர் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Dec 31, 2024, 09:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி, ஹரியானா, சண்டிகர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு குளிர் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வட இந்தியா முழுவதும் குளிர்காலம் தீவிரமடைந்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் ஹரியானா, சண்டிகர், டெல்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், ஹிமாச்சலம்பிரதேசத்திற்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. தலைநகர் டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸை ஒட்டி பதிவாகியுள்ளது.

பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் வரும் 3-ம்தேதி குளிர் அலை வீச வாய்ப்புள்ளதாகவும், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அடர் பனி நிலவும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சண்டிகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 6 டிகிரி செல்சியஸை ஒட்டி பதிவானது.

ஹிமாச்சலப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் வெப்பநிலை உறைநிலைக்கு கீழ் சென்றதால், நீர் நிலைகள் உறைய தொடங்கியுள்ளன. பல இடங்களில் பனிப்பொழிவும் நிலவுகிறது.

ஜம்மு – காஷ்மீரில் பனிப்பொழிவு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலையில் சுமார் மைனஸ் 3 புள்ளி 8 சென்டிமீட்டருக்கு பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. புட்காம் மாவட்டத்தில் ஒன்று புள்ளி 7 சென்டிமீட்டரும், அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள சமவெளிகளில் சுமார் மைனஸ் 4 புள்ளி 3 சென்டிமீட்டரும் பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.

கடும் பனிப்பொழிவு காரணமாக ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைகள் முழுவதும் பனியால் மூடப்பட்டுள்ளன. சாலையில் குவிந்துள்ள பனியை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வரும் நிலையில், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல், ராஜஸ்தானின் பெரும்பாலான பகுதிகளிலும் கடுங்குளிர் நிலவி வருகிறது. மலை சுற்றுலா தலமான மவுண்ட் அபுவில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 6 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குறைந்தது. வாகனங்கள், புல்வெளிகள் என அனைத்தும் பனியால் மூடப்பட்டு காட்சியளிக்கின்றன.

இதேபோன்று, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட், மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுராவிலும் மூடுபனி நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Tags: Haryanaindia meteorological departmentJammu and KashmirHeavy snowfallNorth IndiaChandigarh acold wave warningsWinterdelhiRajasthan
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தான் vs தலிபான் போர்! : இந்தியாவுக்கு லாபமா?

Next Post

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-60!

Related News

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies