ஆம் ஆத்மி மீது துணைநிலை ஆளுநரிடம் காங்கிரஸ் புகார்!
Aug 30, 2025, 01:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆம் ஆத்மி மீது துணைநிலை ஆளுநரிடம் காங்கிரஸ் புகார்!

Web Desk by Web Desk
Dec 30, 2024, 12:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ள திட்டங்களின் பெயரில், பொதுமக்களின் தகவல்கள் சேகரிக்கப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை மேற்கொள்ள டெல்லி தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை ஆணையருக்கு துணைநிலை ஆளுநர் சக்சேனா உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் ‘மகிளா சம்மன் யோஜனா’ என்ற திட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்திற்கு அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் வழங்கினாலும், செயல்பாட்டுக்கு வரவில்லை. டெல்லி சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில், மீண்டும் ஆட்சி அமைத்தால், பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் தொகை 2 ஆயிரத்து 100 ரூபாயாக உயர்த்தப்படுமென ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் அறிவித்தார்.

அதேபோல், டெல்லியில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்கும் சஞ்சீவினி என்ற திட்டத்தையும் அவர் அறிவித்தார். இந்த திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான முகாம்களை, அரவிந்த் கெஜ்ரிவாலும், டெல்லி முதலமைச்சர் அதிஷியும் அண்மையில் நடத்தினர். ஆனால், இதுபோன்ற திட்டங்கள் செயல்பாட்டில் இல்லாததால் பொதுமக்கள் தங்களது தகவல்களை தந்து ஏமாற வேண்டாமென டெல்லியின் மகளிர் மேம்பாட்டுத்துறையும், சுகாதாரத்துறையும் அறிக்கை வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பயனாளிகளின் தனிப்பட்ட விவரங்கள் சேகரிக்கப்படுவதாக டெல்லி காங்கிரஸ் மூத்த தலைவர் சந்தீப் தீக்சித், துணைநிலை ஆளுநர் சக்சேனாவிடம் புகார் அளித்தார். மேலும் அவர், டெல்லி தேர்தலையொட்டி பஞ்சாப்பிலிருந்து பணம் கொண்டு வரப்படுவதாகவும், காங்கிரஸ் வேட்பாளர்களின் வீடுகளை பஞ்சாப் உளவுத்துறையினர் கண்காணித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து டெல்லி தலைமை செயலாளர், காவல் ஆணையர் ஆகியோர் விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் சக்சேனா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பதிலளித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை எனவும், லட்சக்கணக்கான மக்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளது பாஜகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags: aam aadmi partyCongress complains to the lieutenant governor about Aam Aadmi!
ShareTweetSendShare
Previous Post

வடபழனி முருகன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Next Post

பாலியல் வன்கொடுமை தொடர்பாக விசாரணையை தொடங்கிய உயர்நீதிமன்ற குழு!

Related News

வெள்ள பாதிப்பால் பரிதவிக்கும் பஞ்சாப் – தீவுகளான நகரங்கள்!

உலகின் பணக்கார பிச்சைக்காரர் : மொத்த சொத்து மதிப்பு 7.5 கோடி ரூபாய்!

ஜப்பானுக்காக சீன ராணுவ அணிவகுப்பை தவிர்த்த இந்தியா!

பிரதமர் மோடியுடன் ஜப்பான் நாட்டின் 16 மாகாண ஆளுநர்கள் சந்திப்பு!

இந்தியா என்ன செய்ய வேண்டும் என்று அமெரிக்கா கூறுவது, எலி, யானையை அடிப்பது போல் உள்ளது – பிரபல பொருளாதார நிபுணர் கருத்து!

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதமாக உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

முஸ்லிம் ஆதரவு கொள்கையை திணிப்பது நகரத்தார் சமூகத்தின் மனத்தை புண்படுத்தாதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

ட்ரம்ப் விதித்துள்ள பெரும்பாலான வரிகள் சட்ட விரோதமானவை – அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

அரசுத் துறைகளில் 3.50 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சொன்னீங்களே செஞ்சீங்களா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

வெள்ள பாதிப்பிற்கு இந்தியா காரணமா? : பாக். அரசு குற்றச்சாட்டை நம்ப மறுத்த சொந்த நாட்டு மக்கள்!

மறைந்த ஆளுநர் இல.கணேசனின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய நிர்மலா சீதாராமன் – குடும்பத்தினருக்கு ஆறுதல்!

மூப்பனார் நினைவு தினம் – நினைவிடத்தில் நிர்மலா சீதாராமன் மரியாதை!

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலவரம் ஏற்படுத்தியது காவல்துறை தான் – அண்ணாமலை

விழாக்கோலம் பூண்ட மதுரை : 300-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளுடன் நடைபெற்ற பிரம்மாண்ட ஊர்வலம்!

சிவகங்கையில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – திமுக முன்னாள் நிர்வாகிக்கு 12 ஆண்டுகள் சிறை!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies