திமுக அரசு தேச விரோதிகள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது என மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கிய நிலையில், தேசிய கீதம் பாடப்படாததால் உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி அவையில் இருந்து வெளியேறினார்.
இது குறித்து பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக சட்டசபையில் நடந்தது அவமானகரமான செயல் என தெரிவித்துள்ளார்.
திமுக அரசு தேச விரோதிகள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது என குற்றம் சாட்டியுள்ள அவர், எப்போதுமே அரசியல் சாசனத்திற்கு எதிரானவர்கள் என்பதை திமுக அரசு நிரூபித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.