தேசிய கீதம் இந்த நாட்டின் பிரிவினை கோஷமா என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேசிய கீதம் வேண்டுமென்றே பேரவையில் அவமதிக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மக்கள் பிரச்சனைகளை சட்டப்பேரவையில் விவாதிக்க முடியவில்லை என்றும், பேரவையில் நடப்பது வெளியில் தெரியக்கூடாது என திமுக அரசு நினைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.