திமுகவின் அனுதாபியே அமைச்சரோடு நெருக்கமாக இருக்கிறார் என்றால், பதவியில் இருந்தால் என்னென்ன செய்வார்கள் என, பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,நாள்தோறும் பெண்கள் பாலியல் கொடுமையால் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார், பெண்கள் பாதிக்கப்படுவதை அரசு வேடிக்கை பார்ப்பதாகவும், திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் கூறினார்.