கனடா ஒருபோதும் அமெரிக்க மாகாணமாகாது என டிரம்ப்புக்கு அந்நாட்டின் முன்னாள் பிரதமா் ஜீன் கிரெட்டியன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 51வது மாகாணமாக கனடா இணைய வேண்டும் என ட்ரம்ப் தொடா்ந்து கூறி வருகிறார். இது தொடர்பாக பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த கனடா முன்னாள் பிரதமர் ஜீன் கிரெயட்டியன், உலகில் சிறந்த நாடான கனடாவை விட்டுவிட்டு தங்கள் நாட்டு மக்கள் அமெரிக்காவுடன் இணைவாா்கள் என்று டிரம்பால் எவ்வாறு எண்ண முடிந்தது என கேள்வி எழுப்பினார்.
கனடா மட்டுமன்றி பிற ஐரோப்பிய நாடுகளையும் அமெரிக்காவுடன் இணைக்கும் விவகாரத்தில் மற்ற நாடுகள் அமைதி காக்கிறது எனக்கூறியுள்ள அவர், டிரம்பின் திட்டம் கனடாவில் ஒருபோதும் ஈடேறாது என குறிப்பிட்டுள்ளார்.