அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதாக அப்பாவிகள் கைது - சீமான் கண்டனம்!
Aug 15, 2025, 08:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதாக அப்பாவிகள் கைது – சீமான் கண்டனம்!

Web Desk by Web Desk
Jan 16, 2025, 11:07 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதற்காக அப்பாவி மக்களை கைது செய்ய காட்டும் வேகத்தை, வேங்கைவயலில் மலம் கலந்த குற்றவாளிகளை கைது செய்வதில் திமுக அரசு ஏன் காட்டவில்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்  சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது : “தமிழ்நாடு வனத்துறை அமைச்சர்  பொன்முடி மீது சேறு வீசியதாகக் கூறி, விழுப்புரம் மாவட்டம், இருவேல்பட்டு கிராம மக்களை காவல்துறையினர் மூலம் அடக்குமுறையை ஏவி வலுக்கட்டாயமாக கைது செய்து இழுத்துச்செல்லும் காட்சிகள் பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது. சிறிதும் மனச்சான்றற்ற திமுக அரசின் இத்தகைய கொடும்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.

மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வீடுகள், கால்நடைகள், விளைவித்த பயிர்கள் என அனைத்தையும் இழந்து வாழ்வா-சாவா நிலையிலிருந்த மக்களை உரிய நேரத்தில் சந்தித்து துயர்துடைப்பு உதவிகள் செய்யாத தமிழ்நாடு அரசின் மீதான அறச்சீற்றத்தின் வெளிப்பாடாக யாரோ ஒருவர் அமைச்சர் மீது சேற்றினை வீசியதற்காக, வன்மம் கொண்டு, ஒரு மாத கால இடைவெளிக்கு பிறகு, அப்பாவி கிராம மக்கள் அனைவரையும், பொங்கல் விழாவினைக்கூட நிம்மதியாக கொண்டாடவிடாமல் குரூர மனப்பான்மையுடன் கைது செய்து சிறையிலடைப்பது என்பது கொடுங்கோன்மையின் உச்சமாகும்.

வாக்களித்து தேர்ந்தெடுத்த மக்களை, அவர்கள் துன்பப்படும் வேளையில் சென்று சந்திக்காது மக்களைத் துயரச்சேற்றில் தள்ளிய அமைச்சருக்கும், திமுக அரசுக்கும் என்ன தண்டனை கொடுப்பது? யார் தண்டனை கொடுப்பது? அமைச்சர் பொன்முடி பொதுவாழ்வில் அப்பழுக்கற்ற மனிதப்புனிதரா?

மகளுக்கும் ஆயிரம் – அம்மாவுக்கும் ஆயிரம் என்றும், ஓசி பஸ் என்றும் தமிழ்நாட்டு மகளிரை இழித்துப் பேசியது, மனு கொடுக்க வந்த மூதாட்டியைத் தலையில் அடித்து தாக்கியது என அதிகார அத்துமீறல்களில் ஈடுபட்ட அமைச்சர் பொன்முடி மீது திமுக அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்த கொடூரர்களை இரண்டு ஆண்டுகளாகியும் கண்டுபிடிக்க திறனற்ற திமுக அரசு, அமைச்சர் மீது சேறு வீசியதற்காக அப்பாவி கிராம மக்களை விரட்டி விரட்டி வேட்டையாடுவதற்கு வெட்கமாக இல்லையா?

சேறு வீசியவர்களை கைது செய்ய இத்தனை வேகம் காட்டும் தமிழ்நாடு காவல்துறை அதில் நூற்றில் ஒரு பங்கு வேகத்தையாவது குடிநீரில் மலம் கலந்த குற்றவாளிகளை கைது செய்வதில் ஏன் காட்டவில்லை? இதுதான் திமுக அரசு கட்டிக்காக்கும் சமூகநீதியா? இதுதான் திராவிட மாடல் அரசின் இந்தியா வியக்கும் சாதனையா?

ஆட்சி அதிகாரம் கையிலிருக்கும் மமதையில், ஆணவப்போக்குடன் திமுக அரசு மேற்கொள்ளும் கொடுங்கோன்மை செயல்கள் அனைத்திற்கும் தமிழ்நாட்டு மக்கள் முடிவுரை எழுதும் நாள் வெகுதொலைவில் இல்லை.

ஆகவே, வனத்துறை அமைச்சர் ஐயா பொன்முடி மீது சேறு வீசியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இருவேல்பட்டு கிராம மக்கள் அனைவரையும் எவ்வித வழக்கும் பதியாமல் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன் என சீமான் தெரிவித்துள்ளார்.

Tags: Minister Ponmudidmk minister ponmudivilupuramseemanNaam Tamilar katchiVengaivayal.villagers arrest issue
ShareTweetSendShare
Previous Post

ஆயுதப்படைகளை நவீன போர் படைகளாக மத்திய அரசு மாற்றி வருகிறது : ராஜ்நாத் சிங்

Next Post

பணகுடி அருகே இளவட்டக்கல் தூக்கும் போட்டி – பெண்கள் பங்கேற்பு!

Related News

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

திமுகவிற்கு வாங்கி தான் பழக்கம்; கொடுத்து பழக்கம் இல்லை – இபிஎஸ் விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் பெரு வெள்ளம் – பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு!

இந்தியாவின் அதிக உள்கட்டமைப்பு முதலீடு நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளை ஆதரிக்கும் – S&P குளோபல் மதிப்பீட்டு கணிப்பு!

1090 பேருக்கு வீர தீர சேவைக்கான குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies