நெல்லை மாவட்டம் பணகுடி அருகே இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் களமிறங்கினர்.
பணகுடி அடுத்த வடலிவிளையில் இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் ராஜகுமாரி என்ற பெண், 55 கிலோ எடையுள்ள இளவட்ட கல்லை தூக்கியபடி 23 முறை கழுத்தை சுற்றி முதலிடத்தை பிடித்தார்.
2வது இடத்தை தங்க புஷ்பம் என்ற பெண் பெற்றார். ஆண்களுக்கான 98 கிலோ இளவட்ட கல் போட்டியில் முதல் பரிசை விக்னேசும், 2வது பரிசை பாலகிருஷ்ணனும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசும், பொன்னாடை அணிவித்தும் கௌரவிக்கப்பட்டனர்.