திருவள்ளுவர் மற்றும் வள்ளலாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி செய்வதாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருக்குறளில் இந்து ஞான மரபின் கருத்துகளை திருவள்ளுவர் தெரிவித்துள்ளார் என்றும், இருவரையும் திராவிட அரசியலுக்குள் திணித்து சுய லாபத்திற்காக பயன்படுத்துகிறார்கள் எனவும் கூறியுள்ளார்.
திருக்குறளுக்கு பிரதமர் வழங்கும் அங்கீகாரத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகிறார் எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.