கட்சிப் பதவி வழங்குவதற்காக பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் தற்போது உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்சிப் பதவி வழங்குவது உள்ளிட்ட முக்கிய பணிகள் நடைபெற்று வருகின்றன.
விழுப்புரம் பகுதியில் பதவி வழங்குவதற்காக அக்கட்சி நிர்வாகிகள் லட்சக்கணக்கில் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வாட்ஸ்அப் மெசேஜ் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நிர்வாகிகள் மத்தியில் பேசிய தவெக பொதுச் செயலாளர் BUSSY ஆனந்த், கட்சிப் பதவி வழங்குவதற்காக பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுத்தார்.