ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள நாம் தமிழர் கட்சியினருக்கு அனுமதி மறுக்கப்படுவதாக அக்கட்சி நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதா லட்சுமி போட்டியிடுகிறார். சீதா லட்சுமிக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரும் பிப்ரவரி 3ம் தேதி வரை வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரத்திற்கு காவல்துறையினர் இடையூறு எற்படுத்துவதாக கூறி அக்கட்சியின் நிர்வாகிகள் தேர்தல் அலுவரிடம் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், வாக்கு சேகரிக்க தங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டினர்.