அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த முடியாது என எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்கக்கூடாது என ரவீந்திரநாத், புகழேந்தி உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடக்கூடாது என இபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் அருள்முருகன் மற்றும் ஆர்.சுப்பிரமணியன் அமர்வு முன் விசாரணைக்கு வந்த நிலையில், தன்னிச்சை அதிகாரம் கொண்ட தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு தடை கோர முடியாது என புகழேந்தி தரப்பில் வாதிடப்பட்டது.
தொடர்ந்து அதிமுக தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், உட்கட்சி விவகாரம் தொடர்பாக உரிமையியல் வழக்குகள் உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த முடியாது என கூறினார்.
தொடர்ந்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.