திமுக நிறைவேற்றிய தேர்தல் வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், பயிர்கடன் தள்ளுபடி குறித்து கேள்வி எழுப்பினால் அமைச்சர் பெரியகருப்பன் அம்புலிமாமா கதைகளை அவிழ்த்து விடுகிறார் என விமர்சித்துள்ளார்.
பொய்களை கூறி ஆட்சிக்கு வந்த திமுக கண்துடைப்புக்காக சிறிய அளவில் பயிர் கடன்களை தள்ளுபடி செய்துள்ளது என தெரிவித்துள்ள அண்ணாமலை, திமுக அரசு இதுவரை நிறைவேற்றிய தேர்தல் வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
சிலை வைக்கிறோம், பெயர் வைக்கிறோம் என மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட நிதியை திமுக அரசு வீணடிப்பதாக குற்றம் சாட்டியுள்ள அண்ணாமலை, நாடாளுமன்றத்தில் உள்ள கேன்டீன் செல்வதற்காகவே திமுக எம்.பிக்கள் டெல்லி வரை செல்கிறார்கள் என மக்கள் கிண்டல் செய்வதாக தெரிவித்துள்ளார்.