Downgrade என்றால் என்ன என்பதை அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு விளக்க வேண்டிய நேரம் இது என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திமுக எம்பி தமிழ்ச்சி தங்கபாண்டியன் 13ஆம் தேதி மாலை டெல்லியிலிருந்து சென்னைக்கு (A1540- இரவு 9.20 மணி) ஏர் இந்தியா விமானத்தில் வணிக வகுப்பு இருக்கையை முன்பதிவு செய்திருந்ததாகவும், ஆனால் எந்த முன் அறிவிப்பும் விளக்கமும் இல்லாமல், இருக்கை தரமிறக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ஒரு எம்.பி.யை இப்படி நடத்தினால், மற்ற பயணிகள் எப்படி நடத்தப்படுவார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே நடுக்கமாக உள்ளதாகவும், பயணிகளின் உரிமைகள் மற்றும் சேவை தரங்களை புறக்கணிப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதுபோன்ற தவறான நிர்வாகத்திற்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் நடந்திருக்கக் கூடாது என்றாலும், பதவி இறக்கம் என்றால் என்ன என்பதை தமிழ்நாட்டில் அதிகாரத்தில் உள்ளவர்களுக்குச் சொல்ல வேண்டிய நேரம் இது என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஒரு எம்.பி.யை இப்படி நடத்தினால் என்று சொல்ல வைக்கும் உரிமை, வாரிசு அரசியலில் வழிவந்ததை பிரதிபலிப்பதாக தெரிவித்துள்ளார்.
விடியலின் வாக்குறுதியுடன், தமிழகம் கடந்த நான்கு ஆண்டுகளில் இருள் சகாப்தத்தில் நுழைந்ததாகவும், திமுக அரசாங்கத்தின் கீழ் தமிழக மக்களின் நிலைமையை விவரிக்க “தரமிறக்கப்பட்டது” என்ற வார்த்தை ஒரு மென்மையான வார்த்தையாகத் தெரிகிறது என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.