சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் வைத்தே கிராம உதவியாளர் தாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் வானியங்குடி ஊராட்சியில் கிராம உதவியாளராக பணிபுரிபவர் கார்த்திகைராஜா. இவரிடம் ஜெயபாரதி என்பவர் தனக்கு சொந்தமில்லாத நிலத்திற்கு அடங்கல் வழங்க கோரியுள்ளார். ஏற்கனவே நிலத்தின் உரிமையாளர் அடங்கல் பெற்றுள்ளதால் கிராம நிர்வாக அதிகாரியை தொடர்பு கொள்ளும்படி கார்த்திகைராஜா கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரும் அவரது தந்தையும் தாலுகா அலுவலகத்தில் கார்த்திகை ராஜாவை சரமாரியாக தாக்கினர். தடுக்க முயன்ற மற்றொரு கிராம உதவியாளரையும் தாக்கினர்.
இந்த சம்பவத்திற்கு கிராம உதவியாளர் சங்க மாநில துணைத்தலைவர் மாரி கண்டனம் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட நபர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.