மொழி அரசியலை புகுத்தி திமுக அரசியல் செய்து வருவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மூன்றாவதாக ஒரு மொழியை மாணவர்கள் கற்க வேண்டும் என்பதே புதிய கல்விக் கொள்கை என தெரிவித்தார்.
தமிழ் மொழியை உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி எடுத்துச் செல்வதாவும், தமிழகத்திற்கான நிதி கிடைக்காமல் இருக்க முதலமைச்சர், துணை முதலமைச்சர் தான் காரணம் என்றும் அவர் சாடினார்.
முதலமைச்சர் குடும்ப பிள்ளைகள் 3ஆம் மொழியை கற்கவில்லையா? என கேள்வி எழுப்பிய எல்.முருகன் ஏழை எளிய மாணவர்களுக்கான வாய்ப்பை திமுக அரசு தடுப்பதாகவும் சாடினார்.
இந்தியை கட்டாயம் கற்க வேண்டுமென மத்திய அரசு வற்புறுத்தவில்லை என்றும், ஏழை மாணவர்களை வஞ்சிப்பதை திமுக அரசு நிறுத்த வேண்டும் அவர் தெரிவித்தார்.
சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு தமிழக அரசு தடையாக இருக்கக் கூடாது என்றும், கல்வியில், இளைஞர்களின் முன்னேற்றத்தில் திமுக அரசியல் செய்ய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தமிழகத்தில் எத்தனை பேருக்கு ஆங்கிலம் நன்கு தெரியும்? என்றும், “அனைத்து அரசு பள்ளிகளிலும் தமிழ் ஆசிரியர்கள் இருக்கிறார்களா என்றும் எல் முருகன் வினவினார்.