காளியம்மாள் கட்சியில் இருந்து விலகுவதாக இருந்தால் விலகலாம் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாம் தமிழர் கட்சி ஜனநாயக அமைப்பு என்றும், விரும்பினால் யாரு வேண்டுமானாலும் செல்ல சுதந்திரம் உள்ளதாக கூறினார். காளியம்மள், முதலில் சமூக செயற்பாட்டாளர் என்றும் அவர் தெரிவித்தார்.
காளியம்மாள் கட்சியில் தொடர்வதா அல்லது மாற்றுக் கட்சிக்கு செல்வதா என்பதை முடிவெடுக்க அவருக்கு முழு சுதந்திரம் உள்ளதாகவும் அவர் கூறினார்.
பருவ காலத்தில் இலையுதிர் காலம் என உண்டு என்றும், அதேபோல தற்பொழுது நாம் தமிழர் கட்சிக்கு கழையுதிர் காலம் என்றும் சீமான் தெரிவித்தார்.