மத்திய அரசு ஒதுக்கிய நிதி எங்கே சென்றது? : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி!
Sep 15, 2025, 12:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மத்திய அரசு ஒதுக்கிய நிதி எங்கே சென்றது? : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி!

Web Desk by Web Desk
Feb 24, 2025, 02:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் அமைத்த சாலைகள் எத்தனை என்பதை முதலமைச்சர் தெரிவிப்பாரா? என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த நெல்லித்துறை பகுதியில், முறையான சாலை வசதி இல்லாததால், மாரடைப்பு ஏற்பட்டு இறந்த ஒருவரின் உடலை, டோலி கட்டி, தூக்கிச் செல்லும் காணொளி, பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ள இந்தப் பகுதியில், ஆயிரத்துக்கும் அதிகமான பழங்குடியினர் வசித்து வருகிறார்கள். ஆனால் இதுவரை இவர்களுக்கு முறையான சாலை வசதிகள் இல்லை என்பது, தமிழக அரசின் அவலநிலைக்குச் சான்று என தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் திட்டங்களுக்குப் பெயரை மாற்றுவதில் மட்டும் முனைப்புடன் இருக்கும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், ஒரு நாள் விளம்பரத்துக்காக, வெற்று அறிவிப்புகளை வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார் என தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் வாஜ்பாய் அவர்கள் கொண்டு வந்த பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தை, முதல்வரின் கிராம சாலைகள் திட்டம் என்று பெயர் மாற்றி, கடந்த 18.03.2023 அன்று திமுக அரசு வெளியிட்ட அரசாணை எண் 34 ன் படி, 2022-2023 ஆம் ஆண்டிற்கு, ₹2,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகத் தெரிவித்தனர் என தெரிவித்துள்ளார்.

எங்கே சென்றது இந்த நிதி? யாரை ஏமாற்ற இந்த வெற்று அறிவிப்புகள்? இந்தத் திட்டத்தின் கீழ் அமைத்த சாலைகள் எத்தனை என்பதை முதலமைச்சர் தெரிவிப்பாரா? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளில், மத்திய அரசின் கிராம் சதக் யோஜனா திட்டத்தின் கீழ், மலைக் கிராமங்களில் சாலைகள் அமைக்க மத்திய அரசு பெருமளவில் நிதி ஒதுக்கியிருக்கிறது.

ஆனால், தமிழக மலைக் கிராமங்களில் இன்னும் சாலைகள் அமைக்காமல், தொடர்ந்து மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். அவசர மருத்துவ உதவி கிடைக்காமல், உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

திருப்பூர், கோவை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாநகரங்களைச் சுற்றியிருக்கும் மலைக் கிராமங்களில் கூட சாலைகள் அமைக்கப்படாமல் இருக்கிறதென்றால், இத்தனை ஆண்டுகளாக மத்திய அரசு ஒதுக்கிய நிதி எங்கே சென்றது? இனியும் தாமதிக்காமல், தமிழகம் முழுவதும், சாலை வசதி இல்லாத மலைக்கிராமங்களுக்கு, உடனடியாக சாலைகள் அமைத்துத் தர வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Tags: tn govtWhere did the funds allocated by the central government go? : Annamalai barrage of questions to Chief Minister Stalin!DMKbjp k annamalaiMK Stalintamil janamtamil janam tv
ShareTweetSendShare
Previous Post

பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினால் என்ன? : நீதிபதிகள் கேள்வி!

Next Post

தமிழகம் மற்றும் வட மாநில இளைஞர்கள் இடையே ஏற்பட்ட மோதல் : உடைக்கப்பட்ட அரசு பேருந்து கண்ணாடிகள்!

Related News

பாஜக தேசிய அமைப்பு பொது செயலாளார் பி.எல்.சந்தோஷ் நாளை தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை!

கொல்லிமலையில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை – சுற்றுலா பயணிகள் புகார்

எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்!

கோவை விருந்தீஸ்வரர் கோவிலில் இசைக்கு தடை விதிப்பதா? – தமிழக அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சரின் நிகழ்சிக்காக சென்ற திமுக நிர்வாகி லாரி ஓட்டுநரை தாக்கி அட்டகாசம்!

முதியவரை காரை ஏற்றி கொலை செய்த திமுக பேரூராட்சி தலைவர் : முறைகேட்டை அம்பலப்படுத்தியால் தொடரும் கொடூரம்!

Load More

அண்மைச் செய்திகள்

உலகிலேயே முதன்முறையாக, மூங்கில்களை கொண்டு எத்தனால் தயாரிக்கும் ஆலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

லடாக் மாரத்தான் 2025 – ஏராளமானோர் பங்கேற்பு!

ஆசிய கோப்பை கிரிக்கெட் – பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி!

கல்லூரி மாணவர்களுக்குப் போதை மாத்திரை விற்பனை – திமுக  கவுன்சிலரின் மகன் உட்பட 5 பேர் கைது!

அந்நிய சக்திகளின் கட்டுப்பாட்டில் ராகுல் காந்தி? : வாக்கு திருட்டு விவகாரத்தில் ஆதாரம் வெளியிட்ட பாஜக!

லடாக் எல்லையில் புது திருப்பம் : அதிநவீன கண்காணிப்பு மூலம் சீனாவுக்கு “செக்”!

இந்தியா மீது 50% வரிவிதிப்பு ட்ரம்பின் மாபெரும் தவறு : அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கடும் விமர்சனம்!

“உங்களுடன் என்றும் நான் இருப்பேன்” – மணிப்பூர் மக்களை நெகிழ வைத்த பிரதமர் மோடி

உள்நாட்டில் தயாராகும் ரஃபேல் விமானங்கள் – முன்மொழிவை வழங்கியது இந்திய விமானப்படை!

விதவிதமாய்.. வித்தியாசமாய்… : வடகொரியாவின் வினோத கட்டுப்பாடுகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies