முதலமைச்சர் ஸ்டாலினின் மும்மொழிக்கொள்கை குறித்த கருத்துக்களுக்கு எதிராக உத்தரப்பிரதேசத்தில் ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சி எம்எல்ஏக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இந்திய மொழிகளில் ஏதாவது ஒரு மொழியை மூன்றாவது மொழியாக கற்கலாம் என கூறப்பட்டுள்ளது.ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் இந்தி திணிப்பு எனக் கூறி உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்திலும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு எழுந்திருக்கிறது. லக்னோவில் உள்ள அம்மாநிலத்தின் சட்டப்பேரவை வளாகத்தில் ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சி எம்எல்ஏக்கள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது ஸ்டாலின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்தி மொழி குறித்து தவறான கருத்துக்களை திரும்ப பெற வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.