பதவி கிடைக்கவில்லை என்றால் எந்த எல்லைக்கும் ஓபிஎஸ் செல்வார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில், ”இரட்டை இலையை முடக்க தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியவர்தான் ஓபிஎஸ் என தெரிவிததார்.
அடியாட்களுடன் கட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கி ஓபிஎஸ் சீல் வைத்ததாகவும் அவர் கூறினார். அதிமுக மூழ்குகிற கப்பல் இல்லை; கரை சேரும் கப்பல் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
முதலமைச்சர் போட்டோசூட் நடத்தி வருவதாகவும், முதலமைச்சர் இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை என்றும் அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதகாவும், பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண்கள் அப்பா என கதறியது ஸ்டாலினுக்கு கேட்கவில்லையா என்றும் இபிஎஸ் கேள்வி எழுப்பினார்.
5 ஆண்டுகால ஆட்சி முடிவில் திமுக ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கியிருக்கும் எனறும் இபிஎஸ் தெரிவித்தார்.