பெண்கள் பாதுகாப்பு குறித்து அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தினால் பாஜக பங்கேற்கும் என்றும், யூகத்தின் அடிப்படையில் நடத்தப்படும் கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம் எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யூகத்தின் அடிப்படையில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என தெரிவித்தார். தொகுதி மறுவரையறை குறித்து மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை எனறும், முதலமைச்சர் ஸ்டாலின் மக்களை திசை திருப்புவதாகவும் அவர் கூறினார்.
தேர்தல் நேரத்தில் தேசிய ஜன நாயக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து தெரியும் என்றும், 2026ம் ஆண்டு திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பதே நோக்கம் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.