மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தபோது தமிழை வளர்க்க திமுக அரசு என்ன செய்தது என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், மாநில எல்லைகளுக்குள் தமிழ் முடங்கவேண்டும் என்று விரும்புகிறீர்களா என முதலமைச்சரை வினவியுள்ளார்.
முந்தைய அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட தமிழ் வளர்ச்சி மையத் திட்டத்தை செயல்படுத்த என்ன முயற்சிகளை மேற்கொண்டீர்கள் என கேட்டுள்ள அண்ணாமலை,
தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சாரத்தின் செழுமையை பரப்ப பிரதமர் எடுத்த முயற்சியில் பாதியையாவது நீங்கள் எடுத்துள்ளீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், 1922ஆம் ஆண்டு ஈரோட்டில் ஈவெரா இல்லத்தில்தான் முதல் இந்தி ஆசிரியர் பயிற்சி கல்லூரி தொடங்கப்பட்டது என்பதையும் தனது பதிவில் அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார்.